சிறை பிடித்த 28 பணயக்கைதிகளில் 21 பேரின் உடல்களை ஒப்படைத்த ஹமாஸ்!
அமெரிக்காவின் மத்தியஸ்தத்துடன் கொண்டுவரப்பட்ட அமைதி ஒப்பந்தத்தின் கீழ் மற்றுமொரு பணயக் கைதியின் உடலை ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலிடம் ஒப்படைத்துள்ளனர்.
தான்சானிய பணயக்கைதி ஜோசுவா மொல்லலின் (Joshua Mollel) உடல் நேற்று ஒப்படைக்கப்பட்டுள்ளது.
தேசிய தடயவியல் மருத்துவ மையத்தில் தடயவியல் பரிசோதனைகள் முடிந்ததைத் தொடர்ந்து, வெளியுறவு அமைச்சகம் 21 வயது மாணவரின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்ததாக குறிப்பிடப்படுகிறது.
இதேவேளை இஸ்ரேலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கிட்டத்தட்ட 2,000 பாலஸ்தீன கைதிகள் இதுவரை ஒப்படைக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடக அறிக்கைகள் தெரிவித்துள்ளன.
கூடுதலாக, காசா பகுதியில் பிடித்து வைக்கப்பட்டிருந்த 20 பணயக்கைதிகளும் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அக்டோபர் 10 முதல் நடைமுறையில் உள்ள போர் நிறுத்த ஒப்பந்தத்தின் விதிமுறைகளின் கீழ் இஸ்ரேலும் ஹமாஸும் இந்த பணயக்கைதிகளை பரிமாறிக் கொள்கின்றன.
இருப்பினும் இஸ்ரேல் வசம் ஒப்படைக்கப்பட்ட ஒரு உடல் தடுத்துவைக்கப்பட்டிருந்த எந்த பணயக் கைதிக்கும் சொந்தமானது அல்ல எனக் கூறி ஹமாஸ் அமைப்பின் மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலை தொடர்ந்து தற்போது அமைதி ஒப்பந்தம் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





