சர்ச்சைக்குரிய சடலத்தை ஒப்படைத்த ஹமாஸ் – கடும் கோபத்தில் இஸ்ரேல்

ஹமாஸ் அமைப்பினால் பணயக் கைதிகளைப் பிடித்து வைத்திருந்த போது உயிரிழந்தவர்களின் சடலங்களை இஸ்ரேலிடம் ஒப்படைப்பதில் மீண்டும் சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களின் சடலங்களை ஒப்படைப்பதில் ஹமாஸால் தாமதம் ஏற்பட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
மேலும் ஹமாஸ் அமைப்பினால் தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட, நான்கு உடலங்களில் ஒன்று, தேடப்படும் பணயக்கைதிகளுடனும் பொருந்தவில்லை என்று இஸ்ரேல் கூறியுள்ளது.
அமெரிக்காவின் காசா அமைதித் திட்ட முதல் கட்டத்திற்கு அமைய 48 பணயக்கைதிகளையும் இஸ்ரேலிடம் ஒப்படைக்க ஹமாஸ் இணக்கம் தெரிவித்திருந்தது.
இதன்படி, உயிருடன் உள்ள 20 பணயக்கைதிகளும், ஏழு பணயக்கைதிகளின் உடலங்களும், இஸ்ரேலுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.
இந்த நிலையில், நேற்று இரவு ஒப்படைக்கப்பட்ட நான்கு உடலங்களில் ஒன்று, எந்த பணயக்கைதிகளுடன் பொருந்தவில்லை என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இதேவேளை, பணயக்கைதிகளின் உடல்களை ஒப்படைப்பதில் ஏற்பட்ட தாமதங்களுக்குப் பதிலளிக்கும் விதமாக, காசாவிற்கு உதவி செய்வதை கட்டுப்படுத்தப் போவதாக இஸ்ரேல் எச்சரித்துள்ளது.