4 பணயக்கைதிகளின் உடல்களை இஸ்ரேலிடம் ஒப்படைத்த ஹமாஸ்
ஹமாஸ் அமைப்பிடம் இருந்து நான்கு பணயக்கைதிகளின் உடல்களைப் பெற்றுக்கொண்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (IDF) உறுதிப்படுத்தியுள்ளன.
இந்த உடல்களை ஒப்படைக்கும் பணி சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தால் (ICRC) எளிதாக்கப்பட்டது என்று சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பணயக்கைதிகள் தொடர்பான ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, ஹமாஸ் அமைப்பானது உயிரிழந்த 24 பணயக்கைதிகளின் உடல்களையும் இஸ்ரேலிடம் ஒப்படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எஞ்சியுள்ள உடல்களை ஒப்படைக்கும் நடைமுறைகள் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.





