ஹமாஸிற்கு அதிகாரம் வழங்க முடியாது! அமெரிக்கா கடும் எச்சரிக்கை
காசா (Gaza) பகுதியை ஹமாஸ் (Hamas) அமைப்பு தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியாது என அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் (Secretary of State) மார்கோ ரூபியோ (Marco Rubio) தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் முக்கிய உயர்மட்ட அதிகாரி ஒருவரின் முக்கிய அரசியல் நிலைப்பாடாக, இந்த கூற்று வெளியாகிப் பேசுபொருளாக மாறியுள்ளது.
காசாவின் எதிர்கால நிர்வாகம் தொடர்பாக அமெரிக்காவின் வெளிவிவகார அமைச்சர் சில கடுமையான நிபந்தனைகளை முன்வைத்துள்ளார்.
காசாவில் இனியும் ஹமாஸ் அமைப்புக்கு ஆட்சியமைக்கும் அதிகாரம் வழங்க முடியாது என அவர் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
ஹமாஸ் அமைப்பினர் எவ்வித நிபந்தனையுமின்றி தமது ஆயுதங்களைக் கைவிட வேண்டும் என எச்சரித்துள்ளார்.
இந்த நிபந்தனையை ஹமாஸ் மீறினால், அது சமாதான ஒப்பந்தத்தை மீறுவதாக அமையும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
காசாவின் நிர்வாகம் தொடர்பிலான சகல முடிவுகளையும் இஸ்ரேலும் (Israel), அதன் நட்பு நாடுகளும் மட்டுமே வகுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஹமாஸ் அமைப்பின் அச்சுறுத்தல் இன்றி வாழும் ஒரு சிறந்த எதிர்காலத்தை காசா மக்கள் பெற அமெரிக்கா உதவி செய்யும். அதன் ஒரு பகுதியாகவே இந்த நிலைப்பாட்டை அமெரிக்கா எடுத்துள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சர் மார்கோ ரூபியோ மேலும் தெரிவித்துள்ளார்.





