காசா போர்நிறுத்தத்திற்கான கத்தார்-எகிப்திய முன்மொழிவை ஏற்ற ஹமாஸ்
கத்தார் மற்றும் எகிப்து மத்தியஸ்தர்கள் முன்வைத்த காசா போர் நிறுத்தத்திற்கான முன்மொழிவுக்கு ஹமாஸ் ஒப்புதல் அளித்துள்ளதாக பாலஸ்தீனிய குழு தெரிவித்துள்ளது, இருப்பினும் இஸ்ரேல் இந்த திட்டம் குறித்து கருத்து தெரிவிக்கவில்லை.
“ஹமாஸ் இயக்கத்தின் அரசியல் பணியகத்தின் தலைவர் இஸ்மாயில் ஹனியே, கத்தார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் அல் தானி மற்றும் எகிப்திய உளவுத்துறை அமைச்சர் திரு அப்பாஸ் கமெல் ஆகியோருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, ஹமாஸ் அவர்களின் ஒப்புதலைத் தெரிவித்தார்.
ஹமாஸின் அரசியல் பணியகத்தின் உறுப்பினர் கலீல் அல்-ஹய்யா, கத்தார்-எகிப்திய பிரேரணையில் காசாவில் இருந்து இஸ்ரேலியப் படைகளை திரும்பப் பெறுதல் மற்றும் இடம்பெயர்ந்த பாலஸ்தீனியர்கள் அவர்களது வீடுகளுக்குத் திரும்புதல், அத்துடன் இஸ்ரேலிய கைதிகள் மற்றும் பாலஸ்தீனியர்களின் பரிமாற்றம் ஆகியவை அடங்கும் என தெரிவித்தார்
அல்-ஹய்யாவின் கூற்றுப்படி, இந்த முன்மொழிவில் மூன்று கட்ட போர் நிறுத்தம் அடங்கும், ஒவ்வொரு கட்டமும் 42 நாட்கள் நீடிக்கும்.