உலகம்

விபரீத முடிவுகளை எடுக்க தூண்டும் முடி உதிர்வு தடுப்பு மருந்து: ஐரோப்பிய மருந்து ஒழுங்குமுறை ஆணையம்

முடி உதிர்வைத் தடுப்பதற்காகப் பரிந்துரைக்கப்படும் ‘ஃபினாஸ்ட்ரைட்’ எனும் மருந்தும் அது தொடர்புடைய தயாரிப்புகளும் உயிர்மாய்ப்பு எண்ணங்களை ஏற்படுத்தக் கூடியவை என ஐரோப்பிய மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தின் பாதுகாப்புக் குழு உறுதிப்படுத்தியது.

ஐரோப்பா முழுவதும் பெறப்பட்ட தரவுகளை மதிப்பாய்வு செய்தபின் இதைக் கண்டறிந்ததாக ஆணையம் கூறியது.

ஹார்மோன் குறைப்பாட்டால் ஏற்படும் ஒரு வகை முடி உதிர்தல் பிரச்சினைக்குச் சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு மில்லிகிராம் ‘ஃபினாஸ்ட்ரைட்’ மாத்திரைகளை உட்கொண்டோரில் பெரும்பாலானோருக்கு உயிர்மாய்ப்பு எண்ணங்கள் ஏற்பட்டதாகப் புகார்கள் எழுந்தன என அது கூறியது.

கிடைக்கப் பெற்ற தரவுகளிலிருந்து பக்க விளைவின் தீவிரத்தைத் தீர்மானிக்க முடியவில்லை என ஆணையம் வியாழக்கிழமை (மே 8) அறிக்கையில் குறிப்பிட்டது.

Mithu

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!