H3N2 “சூப்பர் ஃப்ளூ (flu) வைரஸ் – முகக் கவசம் அணியுமாறு வலியுறுத்தல்!
ஐரோப்பிய நாடுகளில் தற்போது H3N2 “சூப்பர் ஃப்ளூ (flu) தொற்று வேகமாக பரவி வருகிறது.
இந்நிலையில் குறித்த காய்சல் வேகமாக பரவுவதை கட்டுப்படுத்த பொது இடங்களில் முகக் கவசம் அணியுமாறு NHS இன் உயர் நிர்வாகி ஒருவர் வலியுறுத்தியுள்ளார்.
இருமல் அல்லது தும்மல் ஏற்பட்டால், அலுவலகங்கள் மற்றும் பொது போக்குவரத்து உள்ளிட்ட பொது இடங்களில் முகக் கவசங்களை அணியுமாறு மக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
தகுதியுள்ளவர்கள் தங்கள் காய்ச்சல் தடுப்பூசியைப் பெற வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் இந்த ஆண்டில் இங்கிலாந்து மருத்துவமனையில் காய்ச்சலுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை கடந்த காலத்தை விட அதிகமாக இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.





