விஜய்யைத் தொடர்ந்து டாப் ஹீரோவை மடக்கிய ஹச். வினோத்

இயக்குனர் ஹச். வினோத் தமிழில் தீரன் அதிகாரம் ஒன்று, சதுரங்க வேட்டை, நேர்கொண்ட பார்வை போன்ற நிறைய படங்கள் இயக்கியுள்ளார்.
இவர் தற்போது நடிகர் விஜயின் கடைசி படமான ஜனநாயகன் படத்தை தயாரித்து வருகிறார். இது தற்போது வெளியாகும் நிலையில் தயாராக உள்ளது.
ஹச் வினோத் ஜனநாயகன் படம் இயக்கும்போதே தனுஷூடன் இணைந்து படம் தயாரிப்பாக இருந்து வந்தது.
இந்த நிலையில், தனுஷ் பெருந்தன்மையுடன் விஜயின் கடைசி படமான ஜனநாயகன் படத்தின் முக்கியத்துவத்தை புரிந்து கொண்டு, தன் படத்தை விஜய் அவர்களுக்காக விட்டுக் கொடுத்து, விஜய் அவர்களின் படம் முடிந்த கையோடு நாம் படப்பிடிப்பை ஆரம்பிக்கலாம் என்று கூறியுள்ளார் என்ற தகவல் கசிந்து வருகிறது. ஜனநாயகன் படம் முடிந்த கையோடு பிசியாக போகிறார் ஹச்.வினோத்.
இவர்கள் இரண்டு பேரின் கூட்டணி நன்றாக இருக்கும் என மக்கள் எதிர்பார்ப்புடன் காத்து கொண்டிருக்கிறார்கள். தனுஷ் மற்றும் ஹச் வினோத் கூட்டணியில் வெளிவரவிருக்கும் படத்தின் படப்பிடிப்பு ஜனநாயகன் படம் ரிலீஸ் ஆனவுடன் தொடங்கும் என வெளி வட்டாரத்தில் பேசிக்கொள்கிறார்கள். இதற்கான அதிகாரப்பூர்வமான தகவல் கூடிய விரைவில் வெளிவரும்.