H-1B விசாவை வைத்திருக்கும் பணியாளர்கள் எதிர்நோக்கும் சிக்கல்!
H‑1B விசாவை வைத்திருக்கும் பணியாளர்களில் பெரும்பாலானோர் தங்களின் தொழிலை மாற்றுவதாக தெரிவிக்கப்படுகிறது.
கேட்டோ இன்ஸ்டிடியூட்டில் குடியேற்ற ஆய்வுகள் இயக்குனர் டேவிட் ஜே பியர் மேற்கொண்ட சமீபத்திய ஆய்வில் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.
இவ் வகையான விசாவை வைத்திருக்கும் பணியாளர்கள் தனது முதலாவது முதலாளியை குறிப்பிட்ட காலத்திற்குள் மாற்றுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தரவுகளின் படி 2005 – 2023 ஆண்டுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் பணியாளர்கள் தங்கள் வேலைகளை 1 மில்லியன் முறை (1,090,890) வேலைகளை மாற்றியுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
2023 நிதியாண்டில், H‑1B தொழிலாளர்கள் 117,153 முறை வேலைகளை மாற்றியுள்ளனர். மற்றொரு முனையில், H‑1B பணியிட மாற்றம் என்பது H‑1B பணியாளர்கள் முதல் முறையாக H‑1B வேலைவாய்ப்பைத் தொடங்குவதை விட மிகவும் பொதுவானது என்று பியர் குறிப்பிடுகிறார்.