சைந்தவி மீது எப்போதும் அது இருக்கும்… ஜீ.வி ஓபன் டாக்

இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் – பாடகி சைந்தவி தம்பதியினர், திருமணம் செய்த 15 ஆண்டுகளுக்கு பின் விவாகரத்து செய்து பிரிந்தனர்.
அதன்பின் ஜிவியின் இசைக்கச்சேரிகளில் சைந்தவி கலந்து கொண்டு பாடியும் வருகிறார். சமீபத்தில் ஜிவி பிரகாஷ் அளித்த பேட்டியில், சைந்தவியுடனான உறவு குறித்து பகிர்ந்துள்ளார்.
அதில், சைந்தவியை எனக்கு 2001ல் இருந்து தெரியும். அவர் என் பள்ளித்தோழி, அவருக்கு கொடுக்க வேண்டிய மரியாதை, கெளரவத்தை நான் கொடுக்கிறேன்.
அவர் ஒரு திறமையான பாடகி, அவருக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை நான் எப்போதும் கொடுப்பேன். நாங்கள் இருவரும் தொழிலில் இணைந்து பணியாற்றுவதில் எந்த சிக்கலும் இல்லை.
நாங்கள் ஒருவரை ஒருவர் மதிக்கிறோம் என்பதால் எங்களால் இணைந்து பணியாற்ற முடிகிறது. இருவரும் பிரிந்திந்தாலும் தொழிலில் சக கலைஞர்களுக்கு என்ன மரியாதை கொடுக்கிறோமோ அதை இருவரும் எப்போது கொடுத்துக்கொள்வோம் என்று ஜிவி பிரகாஷ் வெளிப்படையாக பேசியுள்ளார்.