செய்தி

தெற்கு சூடானில் பேருந்துக்கு தீவைத்த துப்பாக்கிதாரிகள்!

தெற்கு சூடான் தலைநகர் ஜூபாவில் நீண்ட தூர பேருந்து மீது துப்பாக்கிதாரிகள் தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் உகாண்டா நாட்டை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் 8 பேர் காயமடைந்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நேற்று (24) காலை உகண்டாவின் கம்பாலா நகருக்குச் சென்று கொண்டிருந்த பயணிகள் பேருந்தே இந்தத் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதுடன், துப்பாக்கிச் சூட்டுக்குப் பின்னர் பேருந்து முற்றாக எரிந்து நாசமானது.

பயணிகள் பேருந்தில் இருந்து 07 பேரை ஆயுததாரிகள் கடத்திச் சென்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தெற்கு சூடானில் பல வருடங்களாக நீடித்து வரும் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான சமாதான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டாலும், நாட்டின் பல பகுதிகள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது

(Visited 5 times, 1 visits today)

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி