சூடானின் அபிபீயில் ஆயுததாரிகள் தாக்குதல் : பலர் படுகொலை!
சூடான் மற்றும் தெற்கு சூடான் ஆகிய இரு நாடுகளும் உரிமை கோரும் எண்ணெய் வளம் மிக்க பகுதியான அபியீயில் உள்ள கிராமவாசிகள் மீது துப்பாக்கி ஏந்திய நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த தாக்குதலில் 52 பேர் கொல்லப்பட்டதுடன், 64 பேர் காயமடைந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
தாக்குதலுக்கான காரணம் வெளியாகாத நிலையில், நிலப்பிரச்சினை பிரதான காரணமாக இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
நுயர் பழங்குடியினத்தைச் சேர்ந்த ஆயுதமேந்திய இளைஞர்களே மேற்படி தாக்குதலில் ஈடுபட்டிருக்கலாம் என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அந்நாட்டு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
(Visited 31 times, 1 visits today)





