அமெரிக்காவில் துப்பாக்கி பாதுகாப்பு கல்வி அறிமுகம்!
அமெரிக்காவின் மூன்று மாநிலங்களில் உள்ள பாடசாலைகளில் துப்பாக்கி பாதுகாப்பு கல்வி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அர்கன்சாஸ் (Arkansas), டென்னசி (Tennessee) மற்றும் உட்டா (Utah) ஆகிய மாநிலங்களில் உள்ள பாடசாலைகளில் இந்த கல்வி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
புதிய சட்டங்கள் துப்பாக்கி பாதுகாப்பு மற்றும் சரியான சேமிப்பு பற்றி மாணவர்களுக்கு கற்பிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் வேகமாக பரவி வருகிறது. இது இளைஞர்களிடையே குற்றங்கள் அதிகரிக்க முக்கிய காரணியாகும்.
கொலைகள், விபத்துகளினால் ஏற்படும் உயிரிழப்புகளை விட அதிகளவிலான இறப்புகள் இதனால் ஏற்படுகிறது.
2023 ஆம் ஆண்டில், துப்பாக்கி தொடர்பான இறப்புகள் 46,728 ஆக பதிவாகியுள்ளன. அக்டோபர் 31, 2025 நிலவரப்படி, 374 துப்பாக்கிச் சூடுகளில் மொத்தம் 366 பேர் பலியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.




