ஐரோப்பா

பிரான்சில் இளைஞர் மீது துப்பாக்கி பிரயோகம் : காவல் நிலையத்தை முற்றுகையிட்ட மக்கள்!

பிரான்சில் போக்குவரத்து விதிகளை மீறி காரை செலுத்திய 17 வயதான இளைஞர் மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இதில் குறித்த இளைஞர் உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து தலைநகரில் உள்ள காவல்நிலையத்தை  மக்கள் முற்றுகையிட்டுள்ளனர்.   தடுப்புகளுக்கும் குப்பைத் தொட்டிகளுக்கும் தீ மூட்டியதோடு பேருந்து நிறுத்துமிடம் ஒன்றையும் சேதப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில். காவல்துறையினர் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது  கண்ணீர்ப் புகை பிரயோகம் மேற்கொண்டதுடன், 9 பேரைக் கைதுசெய்தனர்.

குறித்த இளைஞர் போக்குவரத்து சோதனை நிறுத்தத்தில் இருந்து தப்பி செல்ல முயற்சித்த நிலையில்,  துப்பாக்கி பிரயோகம் செய்ததாக காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலான நிலையில் பாதுகாப்பு படையினரின் தயார் நிலைக் குறித்த கேள்விகள் எழுந்துள்ளன.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!