வளைகுடா நாடுகளும் ஈரானும் இணைந்து வாழ்வதே ஒரே வழி – கட்டார்
வளைகுடா நாடுகளும் ஈரானும் எதிர்காலத்தில் இணைந்து வாழ்வதற்கான வழிகளை கண்டறிய வேண்டும் என கட்டார் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அல்-அன்சாரி (al Ansari) தெரிவித்துள்ளார்.
வளைகுடா நாடுகள் மற்றும் ஈரான் இடையிலான உறவுகள் குறித்து ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
மேலும் இந்தப் பிராந்திய மக்களுக்கிடையே ஆழமான வரலாற்று மற்றும் சமூக பிணைப்புகள் உள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.
“ஈரான் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இங்கு உள்ளது. இந்தப் பிராந்திய மக்களும் அதேபோன்று நீண்ட காலமாக இங்கு வாழ்ந்து வருகின்றனர். யாரும் எங்கும் செல்லப் போவதில்லை. முழுமையான அழிவு என்பது ஒரு தெரிவாக இருக்க முடியாது,” என்று அவர் கூறினார்.
மேலும், மனிதகுலத்தின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு அண்டை நாடுகள் ஒருவருக்கொருவர் இணைந்து வாழ வேண்டியது அவசியம் எனவும், அதற்கான வழிகளை தேட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.





