கிரீன்லாந்து விவகாரம் : டென்மார்க் – அமெரிக்க உறவில் விரிசல்!
கிரீன்லாந்திற்கு எதிரான டொனால்ட் ட்ரம்பின் தற்போதைய அணுகுமுறை டென்மார்க் பிரதேசத்துடன் அமெரிக்கா கொண்டிருக்கும் தடையற்ற அணுகலைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் என்று அமெரிக்காவின் முன்னணி நிபுணர் எச்சரித்துள்ளார்.
பராக் ஒபாமாவின் (Barack Obama) முன்னாள் உதவி வெளியுறவுச் செயலாளர் பிராங்க் ரோஸ் (Frank Rose) மேற்படி சமிக்ஞை செய்துள்ளார்.
டென்மார்க் மற்றும் கிரீன்லாந்து நிர்வாகத்துடன் பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்திய கடைசி அமெரிக்க அதிகாரி பிராங்க் ரோஸ் (Frank Rose) ஆவார்.
கிரீன்லாந்து விவகாரத்தில் ட்ரம்பின் நிலைப்பாடு தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், ட்ரம்பின் முடிவுகளில் தனக்கு உடன்பாடில்லை எனத் தெரிவித்துள்ளார்.
1951 ஆம் ஆண்டில் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்ததின் மூலம் டென்மார்கின் அனுமதியுடன் அமெரிக்கா கிரீன்லாந்தில் இராணுவ ரீதியாக விரும்பியதை செய்ய முடியும்.
ஆனால், ஜனாதிபதி ட்ரம்ப் கிரீன்லாந்தை டென்மார்க்கிலிருந்து வலுக்கட்டாயமாக எடுத்துக்கொள்வதாக கூறுவதால் கிரீன்லாந்தில் சாதாரணமாக இராணுவ துருப்புக்களை நிலைநிறுத்தக்கூட ஒப்புதல் கிடைக்காமல் போகலாம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.





