கிரீன்லாந்தை புரட்டி எடுத்த புயல் – அத்தியாவசிய பொருட்களை சேமித்து வைக்குமாறு அறிவிப்பு
கிரீன்லாந்தின் தலைநகர் நூக் (Nuuk, Greenland) நகரில் பலத்த காற்று காரணமாக மின் பரிமாற்றத்தில் தொழினுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது.
பலத்த காற்று காரணமாக பிரதான பக்ஸ்ஃப்ஜோர்டு(Buksefjord) நீர்மின் நிலையம் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இதனால் சில பகுதிகளில் நீர் விநியோகம் மற்றும் இணைய சேவைகளும் பாதிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் சீரமைப்பு பணிகளில் அவசர மின் நிலையம் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடிநீர், உணவு, மருந்து, ஆடைகள் மற்றும் மாற்று தகவல் சாதனங்களை குறைந்தது ஐந்து நாட்களுக்கு சேமித்து வைக்குமாறு கிரீன்லாந்து அரசு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
ஆனால், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் (Donald Trump) பிராந்திய திட்டங்கள் தொடர்பாக ஏற்படும் புவிசார் அரசியல் கவனம் காரணமாக, கிரீன்லாந்து நீண்ட நாட்களாக உலக கவனத்தை ஈர்த்து வருகிறது.





