ஈராக்கில் பெரும் சோகம் – நாகரிகத்தின் தொட்டில் அழிவின் விளிம்பில்
நாகரிகத்தின் தொட்டில் எனப்படும் ஈராக்கில், ஆயிரக்கணக்கான ஆண்டுகள் வரலாறு கொண்ட பண்டைய நகரங்கள் அழிவின் விளிம்பில் உள்ளதாக தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். காலநிலை மாற்றத்தால் ஏற்பட்ட கடுமையான வறண்ட வானிலை, அப்பகுதி மண்ணின் உப்புத்தன்மையை அதிகரித்துள்ளது. இதனால் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சூழல், பண்டைய கட்டிடங்களில் பயன்படுத்தப்பட்ட களிமண் செங்கற்களின் கட்டமைப்பை வேகமாகச் சிதைத்து வருகிறது.
ஐக்கிய நாடுகள் சபையின் பண்பாட்டு அமைப்பான யுனெஸ்கோ (UNESCO) இந்த நினைவுச் சின்னங்களைப் பாதுகாக்க வேண்டும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்காக அவசர நிதி உதவியை வழங்க வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பைபிளில் கூறப்படும் ஆபிரகாமின் பிறந்த இடமான ஊர் (Ur) மற்றும் பல பேரரசுகளின் தலைநகராக விளங்கிய பாபிலோன் போன்ற நகரங்களில் உள்ள பல நினைவுச் சின்னங்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகி வருவதாக ஈராக் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.





