அமெரிக்காவில் 90 வயதில் பட்டப்படிப்பை முடித்து சாதனை படைத்த பாட்டி

அமெரிக்காவில் 90 வயதில் பட்டப்படிப்பை முடித்த பெண் ஒருவர் குறித்த செய்தி பதிவாகியுள்ளது.
நவம்பர் 23 ஆம் திகதி, 90 வயதான Annette Roberge, Southern New Hampshire பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாகத்தில் பட்டம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
குறித்த பெண் பல்கலைக்கழகத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அப்போது பிள்ளைகள் இருந்தமையினால் அவர் தனது படிப்பை நிறுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
5 பிள்ளைகளின் தாயான இவர், வணிக நிர்வாகத்தில் பட்டப்படிப்பை வெற்றிகரமாக முடிக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார்.
அந்தப் பல்கலைக்கழகத்தின் மூத்த பட்டதாரி என்ற சாதனையை அவர் படைத்துள்ளார் என பல்கலைக்கழகத்தின் தலைவர் கூறினார்.
(Visited 5 times, 1 visits today)