அரச ஊழியர்களின் வேதன அதிகரிப்பு: வெளியான புதிய தகவல்

அரச ஊழியர்களின் வேதனம் தொடர்பிலான பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்ட நிபுணத்துவ குழுவின் பரிந்துரைகளைச் செயற்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு இன்று (02) வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி எதிர்வரும் ஜனவரி 1, 2025 முதல் அரச ஊழியர்களின் அடிப்படை வேதனம் 24 – 50 சதவீதம் வரையில் அதிகரிக்கப்படவுள்ளது.
(Visited 11 times, 1 visits today)