சுற்றுலாத்துறையை மேம்படுத்த தனியார் துறையை ஈடுபடுத்தும் அரசாங்கம்!
இலங்கை சுற்றுலாத்துறையை திறம்பட மேம்படுத்துவதில் தனியார் துறையை ஈடுபடுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக துறைமுகங்கள்இ கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
காங்கேசன்துறை துறைமுகத்தின் புதிய பயணிகள் முனையத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இந்த புதிய முனையத்தின் வழியாக ஒரே நேரத்தில் 200 பயணிகள் செல்லமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகள் முனையம் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்தியாவுக்குச் சொந்தமான கோர்டெலியா குரூஸின் ஆளு எம்பிரஸ் கப்பல் 800 பயணிகளுடன் துறைமுகத்திற்கு வருகை தந்தது.
வாராந்திர அடிப்படையில் சொகுசு பயணிகள் கப்பல்களை முனையத்திற்கு வரவேற்பதற்காக இலங்கை துறைமுக அதிகாரசபை மற்றும் துறைமுக அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்ட புதிய வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியே இந்த உல்லாசக் கப்பலின் வருகையாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த நிகழ்வின்போது கருத்து தெரிவித்த அமைச்சர்இ காங்கேசன்துறை துறைமுகத்தின் உட்கட்டமைப்பு அபிவிருத்தித் திட்டங்களுக்கு இந்திய அரசாங்கம் நிதியுதவி அளிக்கும் எனக் கூறினார்.