அமெரிக்காவில் தொடரும் அரசாங்க பணி நிறுத்தம் – வான்வெளியை மூட திட்டம்!
அமெரிக்காவில் அரசாங்க பணி நிறுத்தம் நீடித்தால் விமான போக்குவரத்து கடும் சிக்கல்களை எதிர்நோக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாட்டின் வான்வெளியின் சில பகுதிகளை மூடுவதாக அமெரிக்க போக்குவரத்து செயலாளர் தெரிவித்துள்ளார். இது மிகப்பெரிய பயண இடையூறுகளைத் தூண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று செய்தியாளர்கள் மத்தியில் பேசிய போக்குவரத்து செயலாளர், “நீங்கள் பெருமளவில் விமான தாமதங்களைக் காண்பீர்கள். பெருமளவில் ரத்து செய்யப்படுவதை நீங்கள் காண்பீர்கள், மேலும் வான்வெளியின் சில பகுதிகளை நாங்கள் மூடுவதை நீங்கள் காணலாம்.
விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் இல்லாததால் எங்களால் இதனை நிர்வகிக்க முடியாது” எனக் கூறியுள்ளார்.
அமெரிக்க அரசாங்கத்தின் பணிநிறுத்தம் காரணமாக, அனைத்து முக்கிய விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு வசதிகளிலும் ஊழியர் பற்றாக்குறை நிலவுகிறது.
தற்போது சுமார் 13,000 விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் ஊதியமின்றி பணியாற்றி வருவதாக ஃபெடரல் விமானப் போக்குவரத்து நிர்வாகம் தெரிவித்துள்ளது.





