ஜெர்மனியில் சட்டத்தை கடுமையாக்க தயாராகும் அரசாங்கம்

ஜெர்மனியில் கூரிய ஆயுதங்களால் ஆபத்தான நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் சட்டங்களை கடுமையாக்குவது தொடர்பில் ஆலோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, வெளியிடங்களுக்கு ஆயுதங்கள் மற்றும் கத்தி போன்றவற்றை எடுத்து செல்லுவது தொடர்பாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
ஜெர்மனியில் பொது வெளியில் கத்திகளை கொண்டு செல்வது தொடர்பான விடயத்தில் பல தடைகளை கொண்டு வருவதற்கு உத்தேசித்துள்ள நிலையில் அதனை சட்டமாக அறிவிப்பதற்கு யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளது.
ஜெர்மனியில் தற்பொழுது கத்தி குத்து சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் காணப்படுகின்ற நிலையில் அவசர தேவைகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
(Visited 10 times, 1 visits today)