ஜப்பானிய வான்வெளியில் அத்துமீறி நுழைந்த சீன விமானத்தால் அதிர்ச்சி
ஜப்பானின் வான்வெளியை மீறி சீன உளவு விமானம் ஒன்று கியூஷு தீவின் மேற்கே பறந்ததாக ஜப்பான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த விமானம் உள்ளூர் நேரப்படி இன்று காலை 11:29 முதல் 11:31 வரை பறந்ததாகவும், ஜப்பானிய விமானப்படை ஜெட் விமானங்கள் வரும் போது வான்வெளியை விட்டு வெளியேறியதாகவும் ஜப்பான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சீன விமானம் Y-9 உளவு விமானம் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
சீன ராணுவ விமானம் ஒன்று ஜப்பானின் வான்வெளியில் அத்துமீறி நுழைந்தது இதுவே முதல் முறை மற்றும் ஜப்பானிய அரசு இராஜதந்திர வழிகள் மூலம் சீனாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
(Visited 9 times, 1 visits today)