பிரித்தானிய குடிமக்களை மீட்க அரசு ஏற்பாடு செய்த மீட்பு விமானம் கேலி கூத்தானது
பிராந்தியத்தில் சிக்கியுள்ள குடிமக்களை மீட்க பிரித்தானிய அரசு ஏற்பாடு செய்த முதல் மீட்பு விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தாமதமடைந்துள்ளது.
ஓமான் நாட்டில் இருந்து புறப்படவிருந்த அந்த விமானம் நேற்று இரவு புறப்பட வேண்டியிருந்தாலும், தற்போது இன்று புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து விரக்தியடைந்த பயணி ஒருவர் “முழுமையான கேலிக்கூத்து” என விமர்சித்துள்ளார்.
மேலும்,வடக்கு ஈராக் பகுதியில் உள்ள குர்திஷ் ஈரானிய படைகள், தங்கள் படைகள் ஈரானுக்குள் நுழைந்ததாக கூறப்படும் தகவல்களை மறுத்துள்ளன.
மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் தொடர்ந்தும் அதிகரித்துள்ள நிலையில், இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே புதிய தாக்குதல்கள்
இடம்பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.





