அரசாங்க தகவல் திணைக்களத்தின் பேஸ்புக் ஹேக் செய்யப்பட்டது

அரசாங்க தகவல் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கம் இன்று (30) பிற்பகல் முதல் ஹேக்கர்களால் கையகப்படுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பான தொழில்நுட்ப மற்றும் சட்ட பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
தற்போது இந்த அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் அரசின் அதிகாரப்பூர்வ தகவல்கள் மற்றும் செய்திகளை புதுப்பிப்பது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, அரசாங்க தகவல் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தை அணுகும் பாவனையாளர்களுக்கு ஏற்பட்ட அசௌகரியங்களுக்கு வருந்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 10 times, 1 visits today)