மீண்டும் இணையும் கவுண்டமணி – யோகி பாபு? வைரல் புகைப்படம்
கவுண்டமணி – செந்தில் ஜோடியை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். ஒரு காலத்தில் இவர்கள் இன்றி படங்களே வராது என்று கூறலாம்.
காலப்போக்கில் பல நகைச்சுவை நடிகர்கள் உருவாகினாலும், இவர்களுக்கு இன்றும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உண்டு.
தற்போது இருவருமே சினிமாவை விட்டு விலகிவிட்டனர். ஆனால் தற்போதும் பல புது முகங்கள் சினிமாவில் வந்துவிட்டார்கள்.
அந்த வகையில் தற்போதைய காலக்கட்டத்தில் யோகி பாபு முதலிடத்தில் இருக்கின்றார்.
இந்த நிலையில், கவுண்டமணி மற்றும் யோகி பாபு இணைந்து எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இது கவுண்டமணி மீண்டும் நடிக்க வருவாரா என்ற கேள்வியை ரசிகர்களிடையே எழுப்பியுள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன்பு சிவகார்த்திகேயன் படத்தில் கவுண்டமணி நடிப்பதாக செய்திகள் வந்தாலும், வயது காரணமாக அவர் திரைப்படத் துறையிலிருந்து ஓய்வு பெற்றதாக தெரிவிக்கப்பட்டது.
ஆனால் யோகி பாபுவின் புதிய இன்ஸ்டாகிராம் பதிவு அந்த நிலையை மாற்றுமா என்று ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.
இந்தப் புகைப்படம் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது, மேலும் “கவுண்டமணி மீண்டும் வருகிறாரா?” என்ற கேள்வி தமிழ் திரைப்பட ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.






