கோட்டாபயவுக்கு யாழ் நீதிமன்றம் உத்தரவு: கொலை மிரட்டலை உறுதிப்படுத்துக!
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தான் எதிர்கொள்ளும் கொலை மிரட்டல் தொடர்பான சத்தியக்கடதாசியை (Affidavit) 2026 பெப்ரவரி 6ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்க வேண்டும் என யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அவறிற்கு ஏட்பட்டுள்ள கொலை மிரட்டல்கள் காரணமாக நீதிமன்றில் ஆஜராக முடியவில்லை என முன்னாள் ஜனாதிபதி சார்பில் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
அவர் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்களின் தன்மை குறித்து எழுத்துபூர்வமாக உறுதிப்படுத்துவதே இந்த சத்தியக்கடதாசியின் நோக்கமாகும்.
சுமார் 14 வருடங்களுக்கு முன்னர் முன்னிலை சோசலிசக் கட்சி (FSP) செயற்பாட்டாளர்களான லலித் குமார் மற்றும் குகன் வீரராஜு ஆகியோரின் கடத்தல் தொடர்பான வழக்கில் ஆஜராகுமாறு முன்னாள் ஜனாதிபதிக்கு யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் அழைப்பாணை விடுத்திருந்தது.
முன்னிலை சோசலிசக் கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயாகொட (Pubudu Jayagoda) இன்று யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் ஆஜராகியிருந்த நிலையில், லலித் குமார் மற்றும் குகன் வீரராஜு ஆகியோர் 2011ஆம் ஆண்டு டிசம்பர் 10ஆம் திகதி கடத்தப்பட்டதாகக் குறிப்பிட்டார்.





