செயற்கை நுண்ணறிவின் ஆபத்திற்கு மத்தியில் புதிய AI கருவியை சோதிக்கும் கூகுள்!
செயற்கை நுண்ணறிவின் ஆபத்திற்கு மத்தியில் Genesis என்ற பெயர் கொண்ட Ai கருவியை கூகுள் நிறுவனம் சோதித்து வருகிறது.
இந்த கருவியால், தற்போது என்ன நிகழ்வு நடந்து கொண்டிருக்கிறது என்பதைத் தானாகவே கண்டறிந்து, செய்திக் கட்டுரையாக அதை எழுத முடியும்.
செய்திக் கட்டுரையை எழுத செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தால் இயங்கும் கருவியை கூகுள் சோதித்து வருகிறது. இந்த கருவியால் எழுதப்பட்ட கட்டுரைகளை நியூயார்க் டைம்ஸ், தி வாஷிங்டன் போஸ்ட் மற்றும் தி வால் ஸ்ட்ரீட் ஜர்னலில் போன்ற செய்தி நிறுவனங்களுக்கு அனுப்பி கருத்துக்களை கேட்டு வருகின்றனர்.
ஜெனிசிஸ் என்ற பெயரில் உள்நாட்டில் அறியப்படும் இந்த கருவியானது, இணையத்திலிருந்து தானாகவே தகவலை எடுத்துக்கொள்ளும். உதாரணத்திற்கு தற்போதைய நிகழ்வுகள், வைரல் செய்திகள், மக்கள் அதிகம் தேடும் செய்திகள் போன்றவற்றை கண்டறிந்து, அதை ஒரு செய்தி வடிவில் இந்த கருவியே எழுதிவிடும். பத்திரிகைக் துறையில் இருப்பவர்களுக்கு தன் வேலையை எளிமையாக்க இந்த கருவி உருவாக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
இது குறித்து பேசிய நியூஸ் கார்ப் நிறுவன செய்தித் தொடர்பாளர், “எங்களுக்கு கூகுளுடன் சிறந்த உறவு உள்ளது. மேலும் சுந்தர் பிச்சையின் பத்திரிகைத் துறைக்கான அவரின் அர்ப்பணிப்பை நாங்கள் பாராட்டுகிறோம்” என்றார்.
மறுபுறம் நுணுக்கம் மற்றும் கலாச்சார புரிதல் தேவைப்படும் தலைப்புகளில் இந்த கருவி பத்திரிகையாளர்கள் மற்றும் செய்தி நிறுவனங்களால் தவறாகப் பயன்படுத்தப்பட்டால், அது இந்த கருவியின் நம்பகத்தன்மையை மட்டுமல்ல, அதைப் பயன்படுத்தும் செய்தி நிறுவனங்களின் நம்பகத்தன்மையையும் சேதப்படுத்த வாய்ப்புள்ளது என பத்திரிகை நிறுவனங்கள் தங்களின் கோரிக்கையை வைத்தனர்.
ஜெனிசிஸ் கருவியை உருவாக்கும் முயற்சியில் ஏன் கூகுள் நிறுவனம் கையில் எடுத்துள்ளதென்றால், உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள் கூகுள் செய்து நிறுவனங்களுக்கு அதன் விளம்பர வருவாயில் ஒரு பெரிய பகுதியை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாகவே கூகுள் இந்தக் கருவியை உருவாக்குவதாக பலர் கூறி வருகின்றனர்.