அறிவியல் & தொழில்நுட்பம்

இணையத்தில் கசிந்த கூகுள் பிக்சல் 10 சீரிஸ் விபரங்கள்

கூகுளின் அடுத்த தலைமுறை ஸ்மார்ட்போன்களான பிக்சல் 10 சீரிஸ் விரைவில் அறிமுகமாகும் என்று கடந்த சில வாரங்களாக வதந்திகள் தீயாய் பரவி வரும் நிலையில், தற்போது அவற்றின் விலை விவரங்கள் மற்றும் சில முக்கிய அம்சங்கள் குறித்த தகவல்கள் சமூக வலைதளங்களில் கசிந்துள்ளன.

ஆகஸ்ட் மாதத்தில் வெளியீடு நடைபெறும் என்று பரவலாக எதிர்பார்க்கப்படும் இந்த தொடரில், பிக்சல் 10, பிக்சல் 10 ப்ரோ, ப்ரோ எக்ஸ்எல் மற்றும் ப்ரோ ஃபோல்டு என பல்வேறு மாடல்கள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து, கூகுள் தனது புதிய மாடல்களில் எந்தெந்த மாற்றங்களைச் செய்யவிருக்கிறது மற்றும் விலையில் என்ன நிலைப்பாட்டில் இருக்கிறது உள்ளிட்ட எதிர்பார்ப்புகள் உருவாகியிருக்கின்றன.
விலை நிலவரம்:

வின்ஃபியூச்சர் (WinFuture) தளத்தில் டிப்ஸ்டர் ரோலண்ட் குவாண்ட் மூலம் வெளியான தகவல்களின் அடிப்படையில், பிக்சல் 10 சீரிஸ் மாடல்களின் விலைகள் கடந்த ஆண்டுக்கான பிக்சல் 9 சீரிஸின் விலைகளை ஒத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

கூகுள் பிக்சல் 10 சீரிஸ் மாடல்களின் கசிந்த விலை விவரங்களை இந்திய ரூபாயில் (தோராயமாக)
1. பிக்சல் 10
128 GB – €899
256 GB – €999
2. பிக்சல் 10 ப்ரோ
128 GB – €1099
256 GB – €1199
512 GB – €1329
1TB – €1589

3. பிக்சல் 10 ப்ரோ XL
256 GB – €1299
512 GB – €1429
1TB – €1689
4. பிக்சல் 10 ப்ரோ ஃபோல்டு
256 GB – €1899
512 GB – €2029
1TB – €2289
பிக்சல் 10 சீரிஸ் – தொழில்நுட்ப அம்சங்கள்:
பிக்சல் 10 ப்ரோ மற்றும் ப்ரோ எக்ஸ்எல் மாடல்களில் 120Hz LTPO OLED டிஸ்ப்ளே (10 ப்ரோ – 6.3 இன்ச், ப்ரோ எக்ஸ்எல் – 6.8 இன்ச்) வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், கூகுளின் சொந்த தயாரிப்பு டென்சர் ஜி5 சிப்செட், TSMC மூலம் 3nm தொழில்நுட்பத்தில் உருவாகும் என்றால், செயல்திறன் மற்றும் அதன் செயல்பாட்டில் மேம்பாடு இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

இத்துடன், பிக்சல் 10 ப்ரோ மாடல்கள் 16GB RAM, 1TB வரையிலான ஸ்டோரேஜ், மற்றும் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் வசதியுடன் வெளிவரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டைப் போல இல்லாமல், கூகுள் இந்த முறை சாப்ட்வேர் ஆதரவிலும் முன்னிலை வகிக்க தயாராகி உள்ளதாக கூறப்படுகிறது.

(Visited 4 times, 4 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அறிவியல் & தொழில்நுட்பம்

தனிச் செயலி ஒன்றை அறிமுகம் செய்யும் Apple நிறுவனம்!

உலகில் மிகவும் பிரபலமாக Apple நிறுவனம் செவ்விசைப் பாடல்களுக்கென தனிச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளது. Apple Music Classical என்ற அந்தச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அறிவியல் & தொழில்நுட்பம்

மார்ச் 28 திகதி வானத்தில் தோற்றவுள்ள ஆச்சரிய காட்சி! மக்கள் பார்க்க அரிய வாய்ப்பு

பூமிக்கு அருகே ஐந்து கோள்கள் வானத்தில் ஒன்றாக தோன்றும் காட்சிகளை மக்கள் காண சந்தர்ப்பம் மார்ச் 28ம் திகதி ஏற்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதுவரை நடக்காத அரிய வானியல் நிகழ்வுகளில்
Skip to content