சிங்கப்பூரில் ஆயிர கணக்கான வெளிநாட்டவர்களுக்கு வெளியான மகிழ்ச்சியான தகவல்
சிங்கப்பூரில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1,200 வெளிநாட்டினருக்கு PR என்னும் நிரந்தர குடியிருப்பு அந்தஸ்து வழங்கப்படுவதாக சுகாதார அமைச்சர் ஓங் யீ குங் தெரிவித்தார்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் சராசரியாக ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1,200 வெளிநாட்டு சுகாதாரப் பணியாளர்களுக்கு நிரந்தர குடியிருப்பு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளதாக சொல்லப்பட்டுள்ளது.
அதில் 10 பேரில் ஆறு பேர் செவிலியர்கள், மீதமுள்ளவர்கள் மருத்துவர்கள், சுகாதார வல்லுநர்கள் மற்றும் பிற சுகாதாரப் பணியாளர்கள் என்றும் அவர் நாடாளுமன்றக் கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார்.
கடந்த ஆண்டில் அதிகமான வெளிநாட்டு செவிலியர்களுக்கு PR அந்தஸ்து வழங்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
“COVID-19 தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் செவிலியர்கள் ஆற்றிய முக்கிய பங்கை அங்கீகரிப்பதற்காகவும், மேலும் சிங்கப்பூரில் வளர்ந்து வரும் சுகாதாரத் தேவைகளை ஆதரிக்கவும் நிரந்தர குடியிருப்பு அந்தஸ்து வழங்கப்பட்டதாக ஓங் கூறினார்.