ஜெர்மனி மக்களுக்கு மகிழ்ச்சியான தகவல்
ஜெர்மனி நாட்டில் பயிற்றப்பட்ட தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும் என்பதால் அதற்கான நடவடிக்கைகள் தற்பொழுது மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஜெர்மனி நாட்டிலே பயிற்றப்பட்ட தொழிலாளர்கள் பற்றாக்குறையாக காணப்படுவதாக கடந்த காலக்கட்டங்களின் புள்ளி விபரம் ஒன்று வெளியாகியுள்ளது.
இதனடிப்படையில் பயிற்றப்பட் தொழிலாளர்களை ஊக்குவிப்பதற்காக சில நடைமுறைகளை அரசு பின்பற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதாவது பயிற்றப்பட் தொழிலாளர்களை ஊக்குவிப்பதற்காக அவுஸ்பிரிட் என்று சொல்லப்படுகின்ற பயிற்சி கற்கைகளை மேற்கொள்கின்றவர்களுக்கு மாதாந்தம் கொடுக்கப்படுகின்ற உதவி தொகையானது அதிகரித்துள்ளதாக தெரியவந்திருக்கின்றது.
அதாவது இவ்வாறு மாதாந்தம் கொடுக்கப்படுகின்ற தொகையானது இவ்வாண்டு 20 சதவீதமாக அதிகரிக்கப்படும் என்றும் தெரியவந்திருக்கின்றது.
ஜெர்மனிய நாட்டில் இவ்வாறு பயிற்றப்பட்டவர்களுடைய குறையை நீக்குவதற்கான இவ்வகையாக ஊக்குவிப்பு திட்டத்தை மேற்கொண்டால் கூடுதலானவர்கள் தொழிற்பயிற்சிகளை மேற்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
அதனால் இவ்வகையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அரச தரப்பு தெரிவித்துள்ளது.