சிங்கப்பூரில் ஆட்குறைப்புச் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு வெளியான மகிழ்ச்சியான தகவல்
சிங்கப்பூரில் ஆட்குறைப்புச் செய்யப்பட்ட ஊழியர்களுக்குப் புதிய தற்காலிக ஆதரவுத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
துணைப்பிரதமரும் நிதியமைச்சருமான லாரன்ஸ் வோங் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
அவர்கள் பயிற்சிகளுக்குச் செல்லும்போது அல்லது வேறு வேலை தேடும்போது அந்தத் திட்டம் கைகொடுக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
அது குறித்த மேல்விவரங்கள் இவ்வாண்டின் பிற்பகுதியில் வெளியிடப்படும் என்று திரு வோங் கூறியுள்ளார்.
தற்போது நடப்பிலிருக்கும் SkillsFuture திட்டம் விரிவு காணும். அதில் இந்தத் தற்காலிக ஆதரவுத் திட்டம் ஓர் அங்கமாக அமையும்.
சென்ற ஆண்டு (2023) ஆட்குறைப்புச் செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 14,320 ஆகும். 2022ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் எண்ணிக்கை இரட்டிப்பானது.
(Visited 12 times, 1 visits today)