மோட்டார் சாகஷகங்களை கண்டித்த தந்தைக்கு நேர்த்தக் கதி!
ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள்களில் பயணித்த இளைஞர்கள் குழுவை எச்சரித்த நபரை அந்த இளைஞர்கள் தாக்கியதாக வாத்துவ, தல்பிட்டிய பிரதேசத்தில் இருந்து செய்தியொன்று பதிவாகியுள்ளது.
வாதுவ தல்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 19 வயதுடைய துலாஞ்ச ஹேஷாம் விஜேவர்தன என்ற இளைஞன் கடந்த 7ஆம் திகதி அதிவேகமாக மோட்டார் சைக்கிளை செலுத்தி விபத்துக்குள்ளானதில் துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளார்.
மேலும் தனது மோட்டார் சைக்கிளில் சாகச செயற்பாடுகளிலும் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில், துலன்ஜாவின் இறுதிக் கிரியைகள் நேற்று (09.08) வாதுவ வெரகம பொது மயானத்தில் இடம்பெற்றதுடன், சடலத்திற்கு இறுதி அஞ்சலி செலுத்துவதாகக் கூறி இளைஞர்கள் குழு ஒன்று சுமார் 30 மோட்டார் சைக்கிள்களில் ஊர்வலமாக வந்து அங்கு ஆபத்தான ஒற்றைச் சக்கரக் காட்சியை நடத்தியுள்ளனர்.
எனினும், அங்கு தங்கியுள்ள மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் எதிர்ப்புத் தெரிவித்ததோடு, அந்த ஆபத்தான செயலைத் தவிர்க்குமாறு கூறினார்.
அந்த எச்சரிக்கையால் பதற்றமடைந்த இளைஞர்கள் அவரை ஹெல்மெட்டால் அடித்துள்ளனர். பின்னர், அவரை மீட்கும் பணியில் அப்பகுதி மக்கள் பலர் ஈடுபட்டனர்.
சம்பவம் தொடர்பில் வாதுவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்தார். கடந்த பெப்ரவரி மாதம் வெலிபென்ன கல்மட்ட பிரதேசத்தில் இவ்வாறான சம்பவம் ஒன்று பதிவாகியிருந்தது.