ஆசியா செய்தி

ஜப்பானில்10 மில்லியன் யென் பெறுமதியான தங்கத் தேநீர்க் கோப்பை மாயம்

ஜப்பானியக் கடை ஒன்றிலிருந்த 10 மில்லியன் யென் பெறுமதியான தங்கத் தேநீர்க் கோப்பை திருடப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

அது பூட்டப்படாத பெட்டி ஒன்றில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது. சுத்தமான 24 கேரட் தங்கத்தில் செய்யப்பட்ட கோப்பை தோக்கியோவில் உள்ள Takashimaya கடையிலிருந்து திருடப்பட்டது.

கடையில் தங்கத்தில் செய்யப்பட்ட சுமார் 1,000 பொருள்கள் வைக்கப்பட்டிருந்தன. அவற்றில் மிக விலையுயர்ந்த பொருள்களில் ஒன்று, களவு போன தங்கக் கோப்பையாகும்.

வாடிக்கையாளர்கள் அதை அருகில் பார்க்க வேண்டும் என்பதற்காகப் பெட்டி பூட்டப்படவில்லை என்று கடையின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

கோப்பையைப் பையில் போட்டுக்கொண்டு நபர் ஒருவர் இடத்திலிருந்து கிளம்புவது கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியுள்ளது.

பொலிஸார் திருடியவரைத் தேடிவருவதுமன் பாதுகாப்பை அதிகரிக்கக் கடை திட்டமிட்டுள்ளது.

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!