தமிழகத்தில் வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்ட தங்க விலை
தமிழகத்தில் ஆபரணத் தங்க விலை இன்று (20) ஒரே நாளில் பவுனுக்கு3,600 ரூபா உயர்ந்து, வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
அதாவது, ஒரு பவுன் தங்கம் 1,11,200 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் இன்று காலை 22 கரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 160 ரூபா உயர்ந்து, 13,610 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது.
அத்துடன் பவுனுக்கு 1,280 ரூபா உயர்ந்து, 1,08,880 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது.
மேலும் 24 கரட் தங்கம் பவுன்1,18,776 ரூபாவுக்கும் விற்பனையானது.
இந்நிலையில், தங்கம் விலை மாலையில் மீண்டும் 2,320 ரூபா அதிகரித்து ஒரே நாளில் பவுனுக்கு 3,600 ரூபா உயர்ந்துள்ளது.
மேலும் கிராமுக்கு 290 ரூபா உயர்ந்து 13,900 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதாவது, பவுனுக்கு 2,320 ரூபா உயர்ந்து 1,11,200 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
உலக அளவில் பொருளாதார நிலையற்ற தன்மை, கிரீன்லாந்து பிரச்சினை, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகள் தங்கத்தில் மீது அதிக முதலீடு செய்வது போன்ற காரணங்களால், தங்கத்தின் தேவை உயர்ந்து, விலை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
அதேபோன்று வெள்ளியும் தொழில்துறை பயன்பாட்டுக்கு அதிகளவில் கொள்வனவு செய்யப்படுவதால, விலை உயர்வடைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





