அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை – நகை வாங்குவோருக்கான மகிழ்ச்சி செய்தி
உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து, இலங்கையிலும் தங்கத்தின் விலை கடந்த தினங்களுடன் ஒப்பிடுகையில் பாரிய வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.
இதன்படி, 24 கரட் தங்கப் பவுன் ஒன்றின் விலை 12,000 ரூபாவினால் குறைவடைந்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இன்றைய நிலவரப்படி, 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின்விலை 368,000 ரூபாவாகவும், 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 338,600 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
உலக சந்தையில் தங்கத்தின் விலை கடந்த வௌ்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் சுமார் 200 அமெரிக்க டொலரால் வீழ்ச்சியடைந்துள்ளது.
கடந்த வௌ்ளிக்கிழமை ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,889 அமெரிக்க டொலராக காணப்பட்ட நிலையில் இன்றைய (2) தினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலைத 4687 டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது.





