உலகம் செய்தி

அதிரடியாக குறைவடைந்த தங்கத்தின் விலை – மேலும் குறையும் என எதிர்பார்ப்பு

சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று (22) கணிசமான வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

அதற்கமைய, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,494.1 டொலராக விற்பனை செய்யப்படுகிறது.

அதேநேரம், வெள்ளி ஒரு அவுண்ஸ் இன்றையதினம் 68.02 டொலராக விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச நாணயச் சந்தையில் அமெரிக்க டொலரின் வலுவூட்டல் மற்றும் அமெரிக்க மத்திய வங்கியின் (Federal Reserve) வட்டி விகிதம் தொடர்பான நகர்வுகள் இந்த விலை மாற்றத்திற்கு முக்கிய காரணங்களாக அமைந்துள்ளன.

மேலும், மத்திய கிழக்கின் தற்போதைய அரசியல் சூழலும் முதலீட்டாளர்களின் போக்கில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களாக உள்நாட்டு சந்தையில் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கங்களுடன் காணப்பட்டது.

எனினும், சர்வதேச ரீதியில் ஏற்பட்டுள்ள இந்தத் திடீர் விலை வீழ்ச்சி காரணமாக, எதிர்வரும் நாட்களில் இலங்கையிலும் தங்கத்தின் விலை மேலும் குறையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கையில் ஏற்கனவே கடந்த மூன்று நாட்களில் மட்டும் தங்கத்தின் விலையில் சுமார் 29,000 ரூபாய் வரை வீழ்ச்சியை பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!