6000 ரூபாயால் அதிகரித்த தங்கத்தின் விலை!
உலக சந்தையில் தங்கத்தின் விலை 4,150 அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.
இதற்கமைய இலங்கையிலும் தங்கத்தின் விலை 6000 ரூபாயால் அதிகரித்துள்ளது.
கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய விலை நிலைவரத்தின்படி, 22 காரட் தங்கத்தின் விலை 3,09,200 ஆக பதிவாகியுள்ளது.
அதேபோல் 24 காரட் தங்கத்தின் விலை 3,36,000 ஆக உயர்ந்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆபரண தங்கத்தின் விலை இந்த விலையை விட சற்று அதிகமாக இருக்கும் என வர்த்தகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.





