சர்வதேச சந்தையில் புதிய உச்சத்தை எட்டிய தங்கத்தின் விலை

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
தங்கம் அவுன்ஸிற்கு 3,680.80 டொலர் என்று விலை போவதாக தெரியவந்துள்ளது.
அது 1.1 சதவீத உயர்வாகும். அமெரிக்காவில் வட்டி விகிதம் குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அமெரிக்க நாணயம் வலுவிழந்துள்ளது.
அரசாங்கக் கடன் பத்திரங்களுக்கான வட்டியும் குறைந்துள்ளது. இந்நிலையில் முதலீட்டாளர்கள் தங்கம் மீது முதலீடு செய்ய விரும்புவதாக வல்லுநர்கள் கூறியுள்ளனர்.
நிச்சயமற்ற பொருளாதாரச் சூழலில் முதலீடு செய்வதற்குத் தங்கம் பாதுகாப்பான ஒன்று என்று கருதப்படுகிறது.
(Visited 8 times, 8 visits today)