உலகளாவிய இணைய செயலிழப்பு : ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பு
உலகளாவிய இணைய செயலிழப்பு அதன் சில மின்னணு அமைப்புகளை பாதித்துள்ளதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் சிக்கல் தீர்க்கப்படும் வரை எந்தவொரு பரிவர்த்தனையையும் தவிர்க்குமாறு பயனர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
இந்த நிலையில், விண்டோஸ் இயங்குதளத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு விரைவில் சீராகும் என நம்புகிறோம் என மைக்ரோசப்ட் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
தொழில்நுட்ப வல்லுநர்கள், பொறியாளர்கள் மூலம் நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், இதனை விரையில் சீரமைப்பதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
(Visited 7 times, 1 visits today)