அவுஸ்திரேலியாவில் தொண்டை அறுக்கப்பட்ட நிலையில் சிறுமியின் சடலம் மீட்பு!

அவுஸ்திரேலியாவில் இளம் பள்ளி மாணவி ஒருவர் வீட்டில் தொண்டை அறுக்கப்பட்ட நிலையில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த மாணவியை அவரது தாயார் கொலை செய்ததாக கூறப்படுகிறது.
சோஃபி வாங் என்ற 10 வயது சிறுமி ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்டில் உள்ள அவரது வீட்டில் வைத்து கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
தந்தையின் அழைப்பை அவர் ஏற்காத நிலையில் சந்தேகமடைந்த அவர், அவசர சேவைகளை அழைத்துள்ளார்.
சிறுமியை கொலை செய்த அவருடைய தாயார் தப்பியோடிய நிலையில், நான்கு மணி நேரம் கழித்து கைது செய்யப்பட்டுள்ளார்.
(Visited 43 times, 1 visits today)