ஐரோப்பா

பிரித்தானியாவில் திடீர் மரணமடைந்த சிறுமி – துயரத்தில் இருந்து மீண்டு வர முடியாமல் தவிக்கும் குடும்பம்

பிரித்தானியாவில் திடீர் மரணமடைந்த சிறுமியின் இழப்பை தாங்க முடியாமல் தவிக்கும் குடும்பம் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவில் திடீரென்று சுருண்டு விழுந்து மரணமடைந்த 11 வயது மாணவிக்கு, அவரது குடும்பத்தினர் அஞ்சலி செலுத்திய நிலையில் இந்த துயரத்தை சமாளிக்க முடியாதென குடும்பத்தினர் தெரிவிததுள்ளனர்.

பிரித்தானியாவின் ரோச்டேல் பகுதியை சேர்ந்த 11 வயது பாடசாலை மாணவி Falaq Babar என்பவரே பரிதாபமாக மரணமடைந்துள்ளார்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம், குளியலறையில் திடீரென்று மயக்கமடைந்தவர், சுருண்டு விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்தது.

காயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில், ராயல் மான்செஸ்டர் குழந்தைகள் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். மருத்துவமனையில் அவர் தொடர்ந்து சில முறை வாந்தியெடுக்கவும் பின்னர் நினவு திரும்பாத நிலையில் காணப்பட்டார் என தெரிவித்துள்ளனர்.

The family of a 'cherished' 11-year-old girl who died after fainting and hitting her head in the bathroom have spoken of their heartbreak. Falaq Babar, from Rochdale, died in hospital on March 18 last year, weeks after the tragic incident. Speaking to the Manchester Evening News, her family described her as a 'beautiful soul' who 'will always stay in our hearts and thoughts forever'.

இதனையடுத்து, அவசர அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட சிறுமி, பின்னர் மரணமடைந்ததாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரிவான பரிசோதனையில் மூளையில் ஏற்பட்ட காயமே அவர் மரணத்திற்கு காரணமாக அமைந்தது என கண்டறியப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் உடற்கூறு ஆய்வு முன்னெடுத்த Catherine McKenna என்பவர், நீதிமன்றத்தில் விளக்கமளித்துள்ளார்.

கொஞ்ச காலமே தங்களுடன் வாழ்ந்தாலும், Falaq Babar எங்களுக்கு அருமையான பல நினைவுகளையும் அன்பையும் விட்டுச் சென்றுள்ளார் என அவரது தாயார் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

நாங்கள் அனைவரும் அவரை இதயத்தில் இருந்து நேசித்தோம், அவர் எப்போதும் எங்கள் இதயங்களிலும் எண்ணங்களிலும் என்றென்றும் இருப்பாள் எனவும் தாயார் ஷாஸியா தெரிவித்துள்ளார்.

(Visited 21 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்