இந்தியாவில் கண்டுப்பிடிக்கப்பட்ட இராட்சஜ பாம்பு!
குஜராத்தின் கட்ச் பகுதியில் இருந்து மீட்கப்பட்ட புதைபடிவங்கள், இதுவரை வாழ்ந்த மிகப் பெரிய பாம்புகளில் ஒன்றின் முதுகெலும்பைச் சேர்ந்ததாக இருக்கலாம் என இந்திய தொழில்நுட்பக் கழகமான ரூர்க்கியின் புதிய ஆய்வு தெரிவிக்கிறது.
பனந்த்ரோ லிக்னைட் சுரங்கத்திலிருந்து, ஆராய்ச்சியாளர்கள் 27 “பெரும்பாலும் நன்கு பாதுகாக்கப்பட்ட பாம்பின் முதுகெலும்பை கண்டுப்பிடித்துள்ளனர்.
பாம்பு சுமார் 11 முதல் 15 மீட்டர் நீளம் கொண்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது, அழிந்துபோன டைட்டனோபோவாவுடன் ஒப்பிடத்தக்கது.
இது இதுவரை வாழ்ந்த மிக நீளமான பாம்பு என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். அதன் அளவு காரணமாக, இது ஒரு அனகோண்டாவைப் போலவே “மெதுவாக நகரும் பதுங்கியிருந்து வேட்டையாடும் தன்மையை கொண்டிருக்கலாம் என கூறினார்.
புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட இந்த பாம்பு இனத்திற்கு ஆராய்ச்சியாளர்கள் ‘வாசுகி இண்டிகஸ்’ (வி. இண்டிகஸ்) என்று பெயரிட்டுள்ளனர்.
சுமார் 56 முதல் 34 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஈசீன் காலத்தில் தென் ஐரோப்பா வழியாக ஆப்ரிக்கா வரை பரவிய பாம்பு இந்தியாவில் தோன்றிய “தனிப்பட்ட பரம்பரையை இந்த பாம்பு பிரதிநிதித்துவப்படுத்துவதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.