ஜெர்மனியில் அகதிகள் விடயத்தில் கடுமையாகும் சட்டம் – வெளியான முக்கிய தகவல்

ஜெர்மனியில் அகதிகள் விடயத்தில் கடுமையாக சட்டங்களை ஜெர்மன் அரசாங்கமானது அறிமுகப்படுத்தி வருகின்றது.
ஜெர்மனியில் அகதிகள் தொடர்பில் பல்வேறு விதமாக அரச மட்டத்தில் ஆராயப்பட்டு வருகின்றன.
4ஆம் திகதி அகதிகள் ஜெர்மனிய நாட்டில் வேலை செய்வது தொடர்பான சில நெகிழ்வு தன்மையான விடயங்களை ஜெர்மனியின் அமைச்சரவை நிறைவேற்றி இருக்கின்றது.
அதாவது வேலை செய்வதற்காக வழங்கப்படுகின்ற தற்கால வதிவிட விசாவானது ஏற்கனவே 1.8.2018 ஆம் ஆண்டுக்கு முதல் வந்தவர்களுக்கு ஜெர்மனியில் வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் தற்பொழுது வேலை செய்வதற்காக வழங்கப்படுகின்ற தற்கால வதிவிட விசாவானது 2022 ஆம் ஆண்டு இறுதி கட்டத்தில் வந்தவர்களுக்கும் வழங்கப்படும் என்று ஜெர்மனியின் அமைச்சரவை நிறைவேற்றி இருக்கின்றது.
(Visited 19 times, 1 visits today)