சிரியாவில் இருந்து புலம்பெயர்பவர்களுக்கு ஜேர்மனி விடுத்துள்ள எச்சரிக்கை!
சிரிய அரசாங்கத்திற்காக அட்டூழியங்களில் ஈடுபடும் எவருக்கும் தனது நாட்டில் தஞ்சம் புகுவதற்கு எதிராக ஜேர்மன் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரித்துள்ளார்.
அவர்கள் “சட்டத்தின் முழு வலிமையையும்” எதிர்கொள்ள நேரிடும் என்று கூறினார்.
ஜேர்மனி கடந்த தசாப்தத்தில் சிரிய அகதிகளுக்கான முக்கிய இடமாக உள்ளது. மேலும் பல இலட்சம் சிரிய பிரஜைகள் அங்கு வாழ்கின்றனர்.
முன்னாள் சிரிய இரகசிய பொலிஸ் அதிகாரிகள் ஏற்கனவே ஜேர்மனியில் பல துஷ்பிரயோகங்களை முன்னெடுத்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளநிலையில் அமைச்சரின் எச்சரிக்க வந்துள்ளது.
சர்வதேச பாதுகாப்பு அதிகாரிகளும் உளவுத்துறை சேவைகளும் நெருக்கமாக இணைந்து செயல்பட வேண்டும் என்று பேர்பாக் அழைப்பு விடுத்தார்.
இதற்கிடையில் ஜேர்மனி “மிகவும் விழிப்புடன் உள்ளது” என்று உள்துறை அமைச்சர் நான்சி ஃபைசர் கூறினார்.
மேலும் ஒழுங்கற்ற இடம்பெயர்வுகளைக் குறைக்க முயற்சிப்பதால், நாடு ஏற்கனவே அதன் எல்லைகளில் வைக்கப்பட்டுள்ள எல்லைச் சோதனைகளை சுட்டிக்காட்டியுள்ளார்.