இஸ்ரேலுக்கான விமான சேவையை மீண்டும் தொடங்கும் ஜெர்மன்
ஜெர்மன் விமான நிறுவனமான லுஃப்தான்சா ஜனவரி 8 ஆம் திகதி முதல் டெல் அவிவுக்கு விமானங்களை மீண்டும் தொடங்கும் என்று அறிவித்துள்ளது.
முதற்கட்டமாக, லுஃப்தான்சா ஏர்லைன்ஸ் ஆரம்பத்தில் பிராங்பேர்ட்டில் இருந்து நான்கு வாராந்திர விமானங்களையும், முனிச்சிலிருந்து மூன்று வாராந்திர விமானங்களையும் வழங்கும் என வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில் லுஃப்தான்சா ஏர்லைன்ஸ் குறிப்பிட்டுள்ளது.
ஆஸ்திரிய ஏர்லைன்ஸ் எட்டு வாராந்திர இணைப்புகளையும் சுவிஸ் ஐந்து வாராந்திர விமானங்களையும் திட்டமிடுகிறது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 8 முதல் ஐந்து வாராந்திர விமானங்களுடன் சூரிச் மற்றும் டெல் அவிவ் இடையே ஐந்து வாராந்திர விமானங்களை மீண்டும் தொடங்குவதாக சுவிஸ் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலுக்கு எதிராக ஹமாஸ் பயங்கரவாதிகள் முன்னோடியில்லாத தாக்குதலை நடத்தியதை அடுத்து, பாதுகாப்புக் காரணங்களை மேற்கோள் காட்டி, லுஃப்தான்சா குழு இஸ்ரேலுக்கான விமானங்களை அக்டோபர் 9 அன்று நிறுத்தியது.