யூத எதிர்ப்புக்கு எதிராக போராட மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ள ஜேர்மன் அதிபர்
ஜேர்மன் அதிபர் ஓலாஃப் ஷோல்ஸ் தனது நாட்டில் ஹோலோகாஸ்ட் நினைவு தினத்தை கொண்டாடும் போது தீவிர வலதுசாரி தீவிரவாதத்தின் எழுச்சி குறித்து கவலை தெரிவித்தார்.
அவர் “நவ-நாஜிக்கள் மற்றும் அவர்களின் இருண்ட தொடர்புகள் ” பற்றி எச்சரித்துள்ளார்.
மேலும் இனவெறி மற்றும் யூத எதிர்ப்புக்கு எதிராக போராட மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். சமீபத்திய வாரங்களில் வெறுப்பு குற்றங்கள் அதிகரித்து வருகின்றன.
“மத்திய கிழக்கில் நடக்கும் வன்முறைகள் ஜேர்மனியில் சமூக அமைதிக்கு தீவிரமாக ஆபத்தை விளைவிப்பதாக நான் கவலைப்படுகிறேன்,” என்று ஸ்ரைன்மியர் கூறி யுள்ளார்.
மேலும் “எங்கள் நாட்டில் உள்ள பாலஸ்தீன சமூகத்தினரிடம் நான் உரையாற்ற விரும்புகிறேன். காசாவில் பொதுமக்களின் உயிரிழப்புகள் குறித்த உங்கள் வலி மற்றும் விரக்தியைப் பகிர்ந்து கொள்ள நீங்கள் அனைவருக்கும் இடம் இருக்க வேண்டும், ”என்று அவர் கூறியுள்ளார். அவர்களின் அமைதியான ஆர்ப்பாட்டங்களுக்கு அரசியலமைப்பு உத்தரவாதம் அளிக்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.