உக்ரைனுக்கு திடீர் பயணம் மேற்கொண்ட ஜேர்மன் வெளியுறவு அமைச்சர்
ஜேர்மன் வெளியுறவுத்துறை அமைச்சர், திடீரென உக்ரைன் தலைநகர் கீவ்வுக்கு வருகை புரிந்துள்ளார்.
ஜேர்மன் வெளியுறவுத்துறை அமைச்சரான Annalena Baerbock இன்று காலை உக்ரைன் தலைநகர் கீவ்வுக்கு திடீர் வருகை புரிந்துள்ளார்.
ரஷ்யா உக்ரைனை ஊடுருவியபின், அவர் ஜேர்மனிக்கு வருவது இது நான்காவது முறையாகும்.
மிகப்பெரும் தைரியம் மற்றும் மன உறுதியுடன், உக்ரைன் நம் எல்லாருடைய சுதந்திரத்துக்காகவும் கூட போராடிவருகிறது என்றார் அவர்.
உக்ரைன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்கு உதவவும் உறுதியளித்துள்ளார் Annalena. என்றாலும், அவரது இன்றைய வருகைக்கான காரணம் குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை.
(Visited 10 times, 1 visits today)





