இலங்கையில் 43 கோடிக்கு விற்பனை செய்யப்பட்ட இரத்தினக்கல்!

இரத்தினபுரியில் இருந்து மிக அதிக விலைக்கு விற்கப்பட்ட மாணிக்கக்கல் பற்றிய செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
ஒரு நீல இரத்தினக் கல் இன்று (16.08) விற்பனை செய்யப்பட்டுள்ளது. குறித்த இரத்தினக்கல் 43 கோடி ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கஹவத்த கட்டாங்கே பிரதேசத்தில் உள்ள இரத்தினக்கல் சுரங்கத்தில் இருந்து இந்த மாணிக்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனுடைய நிறை 99 கரட் இருந்ததாக கூறப்பட்டுள்ளது.
பாலமடுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த மாணிக்கக்கல் வர்த்தகர் ஒருவரினால் 43 கோடி ரூபாவுக்கு இந்த மாணிக்கம் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
(Visited 18 times, 1 visits today)